பாத்து பிரிங்கி ஹார்ட் ராக் கேஃபேவில் கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம்.

பினாங்கு, நவ 7 –
பினாங்கு பாத்து பிரிங்கியில் அமைந்துள்ள பிரபல ‘ஹார்ட் ராக் கேஃபே’ (Hard Rock Cafe) நிர்வாகம், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஐந்து கருணை இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்றோரை அழைத்துச் சிறப்பாக தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்வை நடத்தியது.
சமூக நன்நோக்கோடு நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான ஒட்டுமொத்த போக்குவரத்து வசதிகள் மற்றும் உணவு உபசரிப்பு உட்பட அனைத்துச் செலவுகளையும் ஹார்ட் ராக் கேஃபே நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த நெகிழ்ச்சியான உதவியைச் செய்துள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் அனைவர்ய்க்கும் கவுரவிப்பு வழங்கப்பட்டது. மேலும்
கருணை இல்லங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், அங்கு வாழும் மக்களும் மட்டுமே இந்நிகழ்வில் முதன்மை மற்றும் முக்கிய சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கவுரவிக்கப்பட்டனர். அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக (Get-together) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
திரு. மைக்கேல் ஸ்மீட்டன் (Michael Smeeton) – பொது மேலாளர், ஹார்ட் ராக் ஹோட்டல் பினாங்கு,
டத்தோ எம். இராமச்சந்திரன் – பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II (ஜெகதீப் சிங் டியோ) அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி, மற்றும் PKAPP ஆலோசகர்
திரு. அழகேசன் அய்யாறு – தலைவர், PKAPP,
டத்தோ மரியதாஸ் கோபால் – பினாங்கு இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம்,
டத்தின் ஜேஜே ஓய் – (டத்தோ மரியதாஸ் கோபாலின் மனைவி)
டத்தோ வாமதேவன் நாகலிங்கம் – PKAPP ஆலோசகர்,
டாக்டர் செல்வராஜா – மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM),
திரு. ராமநாதன் – முன்னாள் பி.டி.சி. (PDC) கவுன்சிலர் என்று பலர் பங்கேற்றனர்.

ஹார்ட் ராக் கேஃபே நிறுவனத்தின் முழு அனுசரணையில் நடைபெற்ற இந்த தீபாவளி கொண்டாட்டம், கருணை இல்லங்களைச் சேர்ந்த அனைவருக்கும் சீரினும் கலந்துகொண்ட சான்றோர்களுக்கும் ஒரு மறக்க முடியாத இனிய அனுபவமாகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாகவும் அமைந்தது.




