மெக்கலும் இந்தியர்கள் சமூகநல சங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு.
பினாங்கு, நவ. 24-
பினாங்கு, மேக்கலும் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் ‘மெக்கலும் இந்தியர்கள் சமூகநல சங்கத்தின்’ சார்பில், முதன்முறையாக தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த இனிய விழாவில், 300-க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
காவல்துறை அதிகாரி சார்ஜன் மேஜர் ரோஸிலன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அறுசுவை தீபாவளி விருந்து பரிமாறப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக, ஆடல், பாடல் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. குறிப்பாக, பட்டர்வொர்த் ஆறுமுகம் நடனக் குழுவினர் வழங்கிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து உற்சாகப்படுத்தின.
சங்கத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு விழா மாபெரும் வெற்றி பெறுவதற்குப் பின்னணியில் இருந்து உழைத்த செயற்குழு உறுப்பினர்களுக்கும், விழாவிற்கு வருகை தந்து ஆதரவு நல்கிய பொதுமக்கள் மற்றும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் சங்கத்தின் தலைவர் திரு. கு. முனியாண்டி தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.




