Malay English
பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மற்றும் குளுகோர் இடைநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு.

பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மற்றும் குளுகோர் இடைநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு.

முன்னாள் மாணவர்களின் இனிய சங்கமம் 60 வயதைக் கடந்தும் தொடரும் அன்புத் பயணம்!

​பினாங்கு, அக். 25 –

பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியிலும் குளுகோர் இடைநிலைப்பள்ளியிலும் கல்வி பயின்று, தங்களின் 60 வது அகவையைக் கடந்த முன்னாள் மாணவர்கள் நடத்திய நெகிழ்ச்சியான சந்திப்பு பினாங்கு தெலுக் பஹாங் அங்சானா தங்கு விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

​நட்பால் நாமறிவோம்; அந்த நட்பால் இனிய அன்பு செய்தோம்” என்னும் அழகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இச்சந்திப்பில், 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் தொடக்கக் கல்வியையும், 1974 மற்றும் 1975ஆம் ஆண்டுகளில் இடைநிலைக் கல்வியையும் தொடங்கத் தொடங்கிய 39 நண்பர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

​பிற்பகல் 3.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாலை நேரத் தேநீரோடும் பலகாரங்களோடு இனிதே தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடந்த காலப் பள்ளி நினைவுகளையும், நிகழ்கால வாழ்க்கையின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வயது முதிர்ந்து முகத் தோற்றங்கள் மாறியிருந்தாலும், உள்ளங்கள் மட்டும் என்றும் இளமையோடு துடிப்பதைக் அவர்களின் அன்பான உரையாடல்கள் வெளிப்படுத்தின.


​சிறப்பு நிகழ்வும் அறுசுவை விருந்தும்!
​இச்சந்திப்பின் முத்தாய்ப்பாக, முன்னாள் மாணவி சு.பரமேஸ்வரி மற்றும் அவர்தம் கணவர் கு.இராமுகுட்டி ஆகியோரின் 47ஆம் ஆண்டு திருமண நாள் மரக்கறி அணிச்சல் (வெஜிடேரியன் கேக்) வெட்டிக் கொண்டாடப்பட்டது.

நண்பர்களின் கைதட்டல்களுக்கிடையில் தம்பதியினர் வாழ்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் இன்சுவையும் அறுசுவையும் கலந்த சிறப்பான மரக்கறி இரவு உணவு பரிமாறப்பட்டது.

​முன்மாதிரியான நட்பு!
​இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், அதற்கான முழுச் செலவினையும் நண்பர்கள் வீ.பிரகலாதன் மற்றும் அவர்தம் மனைவி இரா.குணவதி ஆகியோர் மனமுவந்து ஏற்றுக்கொண்டது அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம்பிடித்தது. வள்ளுவப் பெருமான் “அன்பின் வழியது உயிர்நிலை” என உரைத்த பொன்மொழிக்கு ஏற்ப, இவர்கள் காட்டிய உயர் நட்பு அங்கிருந்த அனைவராலும் மனதாரப் பாராட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *