உஜோங் பத்து கிராம மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது!
செபராங் ஜெயா, அக்.26 –
பட்டர்விர்த் உஜோங் பத்து கிராம மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்றும்
தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச வீடுகள் மாநில அரசு வழகுதல் புதிய மைல்கல் சாதனை என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த், உஜோங் பத்து கிராம மறுமேம்பாட்டுத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில், பினாங்கு மாநில வீடமைப்பு வாரியம் (LPNPP) மற்றும் பாரமவுண்ட் பிராப்பர்ட்டி (Paramount Property) நிறுவனத்திற்கு இடையிலான மேம்பாட்டு ஒப்பந்தம் (Development Agreement – DA) கையெழுத்திடும் நிகழ்வு, அக்டோபர் 25 அன்று தி லைட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வை பினாங்கு மாநில முதலமைச்சர் மாண்புமிகு சௌ கொன் இயோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் பினாங்கு மாநில முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சீ யீ கீன், LPNPP தலைமை நிர்வாக அதிகாரி கைருல்னிசாம் ஹஷிம் மற்றும் உஜோங் பத்து பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தனதுரையில்
”15.87 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த மறுமேம்பாட்டுத் திட்டம், உஜோங் பத்து பகுதியின் தற்போதைய குடியிருப்புச் சூழலை மேம்படுத்தி, நவீன, பாதுகாப்பான, வசதியான மற்றும் திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் குடியிருப்பாக மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் வெறும் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், தற்போதைய காலத்தின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கான நல்வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கூறினார்.
அதேவேளையில், உஜோங் பத்து பகுதியின் பூர்வீகக் குடியிருப்பாளர்களின் நலன்கள், உரிமைகள் மற்றும் அவர்களின் பாரம்பரிய சமூகத் தொடர்புகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதற்கும் பினாங்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மறுமேம்பாட்டுச் செயல்முறைகளில் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதார நலன்களை உறுதி செய்வது எங்களின் தலையாயக் கடமையாகும் என்றார்.

மேலும் பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் இயோ உரையில்
நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்கும் அதேவேளையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பது மாநில அரசின் முக்கியப் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இத்திட்டத்தின் சிறப்பம்சங்களில்
இலவச வீடுகள் வழங்கப்படுகின்றன.
தகுதியுள்ள பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படுகின்றன.
சமூக வீடமைப்புக் கொள்கை: சமூக வீடமைப்புத் திட்டங்களின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல மக்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே முதன்மையான இலக்காகும்.
மலிவு விலை வீடுகள் என்ற வகையில் இந்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 350 மலிவு விலை ‘Rumah MutiaraKu’ வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியுள்ள மக்களுக்கு தரமான மற்றும் வசதியான வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்.

உஜோங் பத்து கிராம மறுமேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் இடையே மிகச் சிறந்த சமநிலையை ஏற்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது முதல்வர் சௌ தெரிவித்தார். ஊஜோங் பத்து, பிறை, கம்போங் மானிஸ் என்ற அதிக இந்தியர்கள் வாழும் பகுதியில் டத்தோஸ்ரீ சுந்தராஜு முன்னெடுப்பில் இலவச வீடுகள் இந்த ஆண்டே கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.




