Malay English
புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நல்லெண்ண விருந்து.

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நல்லெண்ண விருந்து.

​கூலிம், நவ.7 –

கூலிம், லடாங் புக்கிட் செலாரோங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் (PERSATUAN BEKAS PELAJAR) ஏற்பாட்டில், பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான சிறப்பு நிதி திரட்டும் நல்லெண்ண விருந்து (Fundraising Dinner) கூலிம் பாயா பெசார் ஆலய மண்டபத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

​ஒன்றிணைந்து, நம் மாணவர்களின் கல்விக்கும் எதிர்காலத்திற்கும் ஆதரவளிப்போம் என்ற முதன்மை நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்குத் திரளான முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பேராதரவை நல்கினர்.

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நல்லெண்ண விருந்து.
​இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ‘கடார கர்ணன்’ டாக்டர் சின்னையா நாயுடு அவர்களும், டாக்டர் ஜோபினா நாயுடு (PJK, PJM) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அவர்கள் தங்களது வாழ்த்துரையில், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனக் குறிப்பிட்டனர்.

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நல்லெண்ண விருந்து.

​நிகழ்ச்சியின்போது சமுதாயத்தின் பங்களிப்பு குறித்துப் பேசிய ஏற்பாட்டாளர்கள்
​மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒன்றாகக் கை கோர்ப்போம்! நம் பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை மேலும் வலுப்படுத்துவோம். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சிறு பங்களிப்பும் நமது மாணவர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தையும் உயர்வையும் உருவாக்கும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

​தமிழ்க்கல்வியின் பால் பற்றுக்கொண்ட பலரின் வருகையினாலும் பெருந்தன்மையான ஆதரவினாலும் இந்நிகழ்வு பெரும் வெற்றியோடு நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *