Malay English
IPF-Kumaresan

பினாங்கு ஐபிஎப் தலைவர் ச.குமரேசனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு – திரளான தலைவர்கள் கலந்து சிறப்பிப்பு!

IPF-Kumaresan

​தாசேக் முத்தியாரா, நவ 9 –

பினாங்கு மாநிலத் ஐபிஎப் தலைவரும், தேசிய துணைப் பொருளாளருமான ச.குமரேசன் தனது இல்லத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடத்திய ‘திறந்த இல்ல’ (Open House) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

IPF-Kumaresan

​ஒவ்வோர் ஆண்டும் தனது உறவினர்கள், நண்பர்கள், ஐபிஎப் கட்சித் தலைவர்கள் மற்றும் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தீபாவளிப் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்ட ச.குமரேசன், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தாசேக் முத்தியாராவில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இந்த உபசரிப்பை நடத்தினார்.

IPF-Kumaresan

​ஞாயிற்றுக்கிழமை (8-11-2026) இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்நிகழ்வில், ச.குமரேசனின் அன்பான அழைப்பை ஏற்றுப் பல்வேறு தரப்பினரும் திரளாகக் கலந்துகொண்டு தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

IPF-Kumaresan

​இந்நிகழ்வில் தேசிய முன்னணியின் முதன்மை கட்சியான அம்னோவின் பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ ஹாஜி மூசா ஷேக் ஃபாசிர், பத்து காவான் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ ஹாஜி முஹமட் நூர் அஹ்மாட், நிபோங் திபால் அம்னோ துணைத் தலைவர் ஹாஜி அமிர், மசீச (MCA) பாகான் தொகுதிச் செயலாளர் திரு ச்சான் வூய் ஜின், ஐபிஎப் பினாங்கு மாநிலச் செயலாளர் திரு அருள்மணி உள்ளிட்ட அம்னோ, மசீச, ஐபிஎப் ஆகிய கட்சிகளின் மாநில மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களும், பல்வேறு அரசுசாரா இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *