Malay English
Dato Reezal Merican

கப்பாளா பத்தாஸ் மக்களின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு வலுசேர்த்த பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர்.

கப்பளா பத்தாஸ், நவ 13 –

பினாங்கு வட மாவட்டத்தின் கப்பளா பத்தாஸ் , பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரிசால் மரைக்கான் பின் நைனா மரைக்கான் வழங்கிய தீபாவளி அன்பளிப்பு கூடை நிகழ்ச்சியில் ஐபிஎஃப் (IPF) உள்ளிட்ட இந்தியக் கட்சிகளுடன் இணைந்து தீபாவளி அன்பளிப்பு மற்றும் நிதியுதவி வழங்கினார்.

Dato Reezal Merican
​பினாங்கு மாநிலம், பெர்த்தாம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ரிசால் மரைக்கான் பின் நைனா மரைக்கான் தீபாவளித் திருநாளை முன்னிட்டு தொகுதி வாழ் இந்துப் பெருமக்களுக்குத் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் மற்றும் ரொக்கப் பணத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

​இந்துப் பெருமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை எவ்விதக் குறையுமின்றி, மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
​இந்நிகழ்ச்சியில், கப்பளா பத்தாஸ் தொகுதியைச் சேர்ந்த இந்திய சமுதாயக் கட்சிகளான ஐபிஎஃப், மஇகா,பிபிபி
ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தீபாவளிப் பொட்டலங்களுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

Dato Reezal Merican

​ஐபிஎஃப் கட்சியின் இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐபிஎப் சார்பில், அதன் கப்பளா பத்தாஸ் தொகுதித் தலைவர் திரு. தினகரன் ஏழுமலை இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரிசால் மரைக்கான் இணைந்து, ஐபிஎஃப் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை அவர் முன்னின்று வழங்கினார்.

Dato Reezal Merican
​தீபாவளி பண்டிகை காலத்தில் வழங்கப்பட்ட இந்த அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களும் ரொக்கப் பணமும் தங்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதாகப் பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் மூலம் கபலாபத்தாஸ் தொகுதியில் உள்ள பல்வேறு கட்சியினரிடையேயும் மக்களிடையேயும் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *